தமிழ் முரசம்
உங்கள் முரசம்

நோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி
உலகத் தமிழரின் தமிழ்த் தேசிய வானொலி

முள்ளிவாய்க்கால்
முடிவல்ல!

தமிழ் முரசம்
உங்கள் முரசம்

நோர்வேயில் முதன்மைத்
தமிழ் வானொலி

உலகத் தமிழரின் தமிழ்த்
தேசிய வானொலி

முள்ளிவாய்க்கால் முடிவல்ல!

பொங்கும் தமிழைப் பொலிவுறச்செய்வோம்
எங்கள் மண்ணை விடிவுறச்செய்வோம்

இந்த இலக்கினை நோக்காகக் கொண்டு நோர்வே வாழ் தமிழர்களின் குரலாய், தமிழின் குரலாய் எமது பணியாளர்களின் அயராத உழைப்பாலும், நேயர்களினதும், தாயகத்திலுள்ள எமது உறவுகளின் ஒத்துழைப்போடும் கடந்த 24 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ் முரசம்.

எமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் காற்றலையில் எமது கடமை தொடர்கிறது. தமிழ் முரசம் என்றும் அறிவித்தல், தெரிவித்தல், மகிழ்வித்தல் என்ற வானொலியின் அடிப்படை அம்சங்களோடு ஒலித்துவருகிறது.

அறிவித்தல்

தமிழ் அமைப்புக்கள், பொது நிறுவனங்கள்
மற்றும் தமிழ் உறவுகள் விடுக்கும்
அறிவித்தல்கள்

தெரிவித்தல்

தாயகம், உள்நாட்டு, வெளிநாட்டு
செய்திகள், விளையாட்டு, மருத்துவம்
மற்றும் செவ்விகள்

மகிழ்வித்தல்

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க
சினிமா, நகைச்சுவை மற்றும்
போட்டி நிகழ்ச்சிகள்

 • நாம் துணிந்து போராடுவோம் சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது.

  - தமிழீழ தேசியத் தலைவர் -

 • சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்.

  - தமிழீழ தேசியத் தலைவர் -

 • இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை
  எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது.
  சுதந்திரம் இல்லாமல் மனித வாழ்வில் அர்த்தமே இல்லை.

  - தமிழீழ தேசியத் தலைவர் -

 • எமது மொழியும், கலையும், பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை.

  - தமிழீழ தேசியத் தலைவர் -

 • மனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே
  மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கின்றது.

  - தமிழீழ தேசியத் தலைவர் -

 • அனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற
  தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டால்
  எமது விடுதலை இலட்சியம் வெற்றி பெறுவது நிச்சயம்

  - தமிழீழ தேசியத் தலைவர் -

 • மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது.

  - தமிழீழ தேசியத் தலைவர் -

 • ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன், ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.

  - தமிழீழ தேசியத் தலைவர் -

 • மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.

  - தமிழீழ தேசியத் தலைவர் -

 • இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப, வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான, புரட்சிகரமான படைப்புக்களை உருவாக்க வேண்டும்.

  - தமிழீழ தேசியத் தலைவர் -

 • மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு
  அவர்களது கஸ்டங்களைப் போக்குதற்குத்
  திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான்
  உண்மையான அரசியல் வேலை.

  - தமிழீழ தேசியத் தலைவர் -

 • எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது.

  - தமிழீழ தேசியத் தலைவர் -

 • இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.

  - தமிழீழ தேசியத் தலைவர் -

 • சான்றோரைப் போற்றுவதும், கற்றோரைக் கௌரவிப்பதும் தமிழர்களாகிய எமது மரபு, எமது சீரிய பண்பாடு.

  - தமிழீழ தேசியத் தலைவர் -

 • கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள் – எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள் – எதிரியின் படைபலத்தை மனப் பலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.

  - தமிழீழ தேசியத் தலைவர் -

 • எமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேறவேண்டுமாயின் நாம் போராடியே ஆகவேண்டும்.

  - தமிழீழ தேசியத் தலைவர் -

 • நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது.

  - தமிழீழ தேசியத் தலைவர் -

 • எந்த ஒரு விடுதலை இயக்கமும் தனியாக நின்று, மக்களுக்குப் புறம்பாக நின்று, விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. அது நடைமுறைச் சாத்தியமான காரியமுமல்ல.

  - தமிழீழ தேசியத் தலைவர் -

 • தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுரை அர்பணித்துள்ள மாவீர்களான தியாகிகள், காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.

  - தமிழீழ தேசியத் தலைவர் -

தாயகச் செய்திகள்

உலகச் செய்திகள்

நேரலைத்  தளங்கள்

கைத்தொலைபேசி
(Android - Google Play)

முகநூல் நேரலையில்

 • திங்கள்: 19.00 – 22.00
 • செவ்வாய்: 19.00 – 23.00
 • வியாழன்: 19.00 – 00.00
 • ஞாயிறு: 11.00 – 15.00

DAB வானொலி

Lokal Oslo என்ற பெயரில்

 • திங்கள் – வெள்ளி:
  19.00 – 00.00.
 • ஞாயிறு: 11.00 – 14.00.

கைத்தொலைபேசி
(APPLE - App Store)

இணைய வானொலி

tamilmurasam என்ற பெயரில்
24 மணி நேரம்
7 நாட்கள்

மீள் ஒலிபரப்பு

கடந்த நான்கு நேரடி ஒலிபரப்புகளின் பதிவுகள்