போட்டிகளுக்கான விதிமுறைகள்

செல்லகுயில் மற்றும் வானம்பாடிகள்

போட்டிகளுக்கான விதிமுறைகள்

  • இளம் செல்லக்குயில்: 5 வயது முதல் 11 வயது ஆண்/ பெண் சிறார்கள் பங்குபெறலாம்.
  • செல்லக்குயில்: 12 வயது முதல் 18 வயது ஆண்/ பெண் சிறார்கள் பங்குபெறலாம்.
  • வானம்பாடிகள்: 19 வயதும் அதற்கும் மேற்பட்ட ஆண்/ பெண் இருபாலாரும் பங்குபெறலாம்.
  • போட்டிகளில் தமிழ் திரையிசைப் பாடல்கள் மட்டுமே பாடுதல் வேண்டும்.
  • தெரிவுப் போட்டிகளின் முதற்சுற்றானது வானொலி நேரலை நேரங்களில் தொலைபேசி இணைப்பினூடாக அல்லது நேரடி குரல்த் தெரிவாக நடைபெறும்.
  • முதற்சுற்றில் பாடிய பிற்பாடு எமது இணையத்தளத்திற்கு சென்று அங்கு கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை நிரப்பி அனுப்புதல் அவசியம்.  தவறும் பட்சத்தில் தெரிவுக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
  • தகுதிகாண் போட்டியார்கள் 15+15+10 (இ.செ + செ + வா) எனும் எண்ணிக்கையில் தெரிவுசெய்யப்படுவார்கள்.
  • அரைஇறுதிப் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் 2 பாடல்களை தெரிவுசெய்து எமக்கு அனுப்பவேண்டும்.
  • ஒரே பிரிவில், இருவர் ஒரே பாடலை தெரிவுசெய்யும் பட்சத்தில் முதலாவதாக பாடலை பதிவு செய்தவருக்கே அந்த பாடலை பாடும் வாய்ப்பு கிடைக்கும். மற்ற போட்டியாளர் இரண்டாவது பாடல் தெரிவினை பாட வேண்டும்.
  • இறுதிச் சுற்றுக்கான தகுதிகாண் போட்டி «கரோக்கே» பின்னணி இசையுடன் நேர்முக போட்டியாக நடைபெறும்.
  • இறுதிப்போட்டிக்கான போட்டியாளர்கள் 5+5+5 எனும் அடிப்படையில் தெரிவுசெய்யப்படுவார்கள்.
  • தகுதிகாண் போட்டி மற்றும் இறுதிப்போட்டிகளில் பங்கு பெறுபவர்களை துறைசார் நடுவர்கள் தெரிவுசெய்வார்கள்.
  • இறுதிப்போட்டி தமிழ்முரசத்தின் பொன்மாலை பொழுது நிகழ்ச்சியின்போது இடம்பெறும்.
  • இறுதிப்போட்டியின் வெற்றியாளர்களை நடுவர்கள் (70%) + பார்வையாளர் வாக்கு (30%) போன்றவையே தீர்மானிக்கும்.
  • ஒரு பிரிவில் வெற்றி பெறுபவர் அதே பிரிவில் மீண்டும் போட்டியிடமுடியாது.
Read more about the article Hei, verden!
TMR_LOGO_300

Hei, verden!

TMRLogo150x150

உலகமெங்கும் பரந்து வாழும் எம் தமிழ் உறவுகளுக்கு எமது அன்பு வணக்கங்கள்!

"தமிழ் முரசம் - உங்கள் முரசம்"

நோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி

"பொங்கும் தமிழைப் பொலிவுறச்செய்வோம்; எங்கள் மண்ணை விடிவுறச்செய்வோம்"

இந்த இலக்கினை நோக்காகக் கொண்டு நோர்வே வாழ் தமிழர்களின் குரலாய், தமிழின் குரலாய் எமது பணியாளர்களின் அயராத உழைப்பாலும், நேயர்களினதும், தாயகத்திலுள்ள எமது உறவுகளின் ஒத்துழைப்போடும் கடந்த 24 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ் முரசம்.

எமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் காற்றலையில் எமது கடமை தொடர்கின்றது. தமிழ் முரசம் என்றும் அறிவித்தல், தெரிவித்தல், மகிழ்வித்தல் என்ற வானொலியின் அடிப்படை அம்சங்களோடு ஒலித்துவருகிறது.

© 2021 தமிழ்முரசம் வானொலி