தமிழ்முரசம்

நோர்வேயில் முதன்மைத் மிழ் வானொலி

"பொங்கும் தமிழைப் பொலிவுறச்செய்வோம்; எங்கள் மண்ணை விடிவுறச்செய்வோம்"

இந்த வாக்கினை நோக்காகக் கொண்டு நோர்வே வாழ் தமிழர்களின் குரலாய், தமிழின் குரலாய் எமது பணியாளர்களின் அயராத உழைப்பாலும், நேயர்களினதும், தாயகத்திலுள்ள எமது உறவுகளின் ஒத்துழைப்போடும் கடந்த 19 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது தமிழ் முரசம்.
 
எமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் காற்றலையில் எமது கடமை தொடர்கிறது. தமிழ் முரசம் என்றும் அறிவித்தல், தெரிவித்தல், மகிழ்வித்தல் என்ற வானொலியின் அடிப்படை அம்சங்களோடு ஒலித்துவருகிறது.
அறிவித்தல்
தெரிவித்தல்
மகிழ்வித்தல்
»  எமது ஒலிபரப்புகளை பண்பலைவரிசை(fm) 99.3 மற்றும் இலத்திரனியல் ஒலிபரப்பு (DAB)
ஊடாக நேரடியாகவும், எமது இணையதளத்தின் ஊடாக நேரடியாகவும் மற்றும் பதிவு செய்யப்பட்ட மீள் ஒலிபரப்பாகவும் கேட்டு மகிழலாம்.
» Android'ஐ இயங்குதளமாகக் கொண்ட கைத்தொலைபேசிகள் மூலம் Google Market’ல் தமிழ்முரசம் என்ற தேடுதல்மூலம் தமிழ்முரசம் Apps’ஐ பதிவிறக்கம் செய்து அதன் மூலமும் நீங்கள் எமது ஒலிபரப்புகளை நேரடியாக கேட்டு மகிழலாம்.

கல்வியே தமிழரின் கருவி , நம்பிக்கையே தமிழரின் மூலதனம்.
கல்வி எனும் கருவியைக் கொண்டு, நம்பிக்கை எனும் மூலதனத்தை விதைத்து,
மூடநம்பிக்கை எனும் களை அறுத்து,

அறிவு எனும் பயனை அறுவடை செய்வோம்.

<< அறிய அறிய அறியாமை அகலும் >>