தமிழ் முரசம்
தமிழின் குரலாய்; தமிழரின் குரலாய்
தமிழின் குரலாய்தமிழரின் குரலாய்
நோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி
நோர்வேயில்
முதன்மைத் தமிழ்
வானொலி
"பொங்கும் தமிழைப் பொலிவுறச்செய்வோம்; எங்கள் மண்ணை விடிவுறச்செய்வோம்"
இந்த வாக்கினை நோக்காகக் கொண்டு நோர்வே வாழ் தமிழர்களின் குரலாய், தமிழின் குரலாய்
எமது பணியாளர்களின் அயராத உழைப்பாலும், நேயர்களினதும், தாயகத்திலுள்ள எமது உறவுகளின் ஒத்துழைப்போடும்
கடந்த 21 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ் முரசம்.
எமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை
பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு,
எமது இனத்தின் விடிவிற்காய் காற்றலையில் எமது கடமை தொடர்கிறது.
தமிழ் முரசம் என்றும் அறிவித்தல், தெரிவித்தல், மகிழ்வித்தல் என்ற வானொலியின் அடிப்படை அம்சங்களோடு ஒலித்துவருகிறது.
அறிவித்தல்
தமிழ் அமைப்புக்கள்,
பொது நிறுவனங்கள்
மற்றும் தமிழ் உறவுகள் விடுக்கும்
அறிவித்தல்கள்
தெரிவித்தல்
தாயகம், உள்நாட்டு, வெளிநாட்டு
செய்திகள், விளையாட்டு, மருத்துவம்
மற்றும் செவ்விகள்
மகிழ்வித்தல்
சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க
சினிமா, நகைச்சுவை மற்றும்
போட்டி நிகழ்ச்சிகள்
கல்வியே தமிழரின் கருவி, நம்பிக்கையே தமிழரின் மூலதனம்.
கல்வி எனும் கருவியைக் கொண்டு, நம்பிக்கை எனும் மூலதனத்தை விதைத்து,
மூடநம்பிக்கை எனும் களை அறுத்து அறிவு எனும் பயனை அறுவடை செய்வோம்.