தமிழ் முரசம்

உங்கள்  முரசம்

நோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி

நோர்வேயில்
முதன்மைத் தமிழ் வானொலி

  • Oslo -
  • London -

பாடல் போட்டிகளின் முதற்சுற்று நிறைவடைந்துள்ள இந்த வேளையில், அரை இறுதிச்சுற்று தொடர்பான விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்!

பாடல் போட்டிகளின் அரை இறுதிச்சுற்றில்

உங்கள் தெரிவுப்பாடலை பதிவு செய்துகொள்ள..

அறிமுகம்

"பொங்கும் தமிழைப் பொலிவுறச்செய்வோம்; எங்கள் மண்ணை விடிவுறச்செய்வோம்"

இந்த இலக்கினை நோக்காகக் கொண்டு நோர்வே வாழ் தமிழர்களின் குரலாய், தமிழின் குரலாய்
எமது பணியாளர்களின் அயராத உழைப்பாலும், நேயர்களினதும், தாயகத்திலுள்ள எமது உறவுகளின் ஒத்துழைப்போடும்
கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ் முரசம்.

எமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை
பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, 
எமது இனத்தின் விடிவிற்காய் காற்றலையில் எமது கடமை தொடர்கிறது.
தமிழ் முரசம் என்றும் அறிவித்தல், தெரிவித்தல், மகிழ்வித்தல் என்ற வானொலியின் அடிப்படை அம்சங்களோடு ஒலித்துவருகிறது.

அறிவித்தல்

தமிழ் அமைப்புக்கள், பொது நிறுவனங்கள்
மற்றும் தமிழ் உறவுகள் விடுக்கும்
அறிவித்தல்கள்

தெரிவித்தல்

தாயகம், உள்நாட்டு, வெளிநாட்டு
செய்திகள், விளையாட்டு, மருத்துவம்
மற்றும் செவ்விகள்

மகிழ்வித்தல்

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க
சினிமா, நகைச்சுவை மற்றும்
போட்டி நிகழ்ச்சிகள்

நாம் துணிந்து போராடுவோம் சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது.

- தமிழீழ தேசியத் தலைவர் -

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்.

- தமிழீழ தேசியத் தலைவர் -

இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை
எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது.
சுதந்திரம் இல்லாமல் மனித வாழ்வில் அர்த்தமே இல்லை.

- தமிழீழ தேசியத் தலைவர் -

எமது மொழியும், கலையும், பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை.

- தமிழீழ தேசியத் தலைவர் -

மனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே
மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கின்றது.

- தமிழீழ தேசியத் தலைவர் -

அனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற
தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டால்
எமது விடுதலை இலட்சியம் வெற்றி பெறுவது நிச்சயம்

- தமிழீழ தேசியத் தலைவர் -

மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது.

- தமிழீழ தேசியத் தலைவர் -

ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன், ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.

- தமிழீழ தேசியத் தலைவர் -

மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.

- தமிழீழ தேசியத் தலைவர் -

இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப, வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான, புரட்சிகரமான படைப்புக்களை உருவாக்க வேண்டும்.

- தமிழீழ தேசியத் தலைவர் -

மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு
அவர்களது கஸ்டங்களைப் போக்குதற்குத்
திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான்
உண்மையான அரசியல் வேலை.

- தமிழீழ தேசியத் தலைவர் -

எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது.

- தமிழீழ தேசியத் தலைவர் -

இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.

- தமிழீழ தேசியத் தலைவர் -

சான்றோரைப் போற்றுவதும், கற்றோரைக் கௌரவிப்பதும் தமிழர்களாகிய எமது மரபு, எமது சீரிய பண்பாடு.

- தமிழீழ தேசியத் தலைவர் -

கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள் – எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள் – எதிரியின் படைபலத்தை மனப் பலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.

- தமிழீழ தேசியத் தலைவர் -

எமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேறவேண்டுமாயின் நாம் போராடியே ஆகவேண்டும்.

- தமிழீழ தேசியத் தலைவர் -

நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது.

- தமிழீழ தேசியத் தலைவர் -

எந்த ஒரு விடுதலை இயக்கமும் தனியாக நின்று, மக்களுக்குப் புறம்பாக நின்று, விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. அது நடைமுறைச் சாத்தியமான காரியமுமல்ல.

- தமிழீழ தேசியத் தலைவர் -

தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுரை அர்பணித்துள்ள மாவீர்களான தியாகிகள், காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.

- தமிழீழ தேசியத் தலைவர் -

நேரலைத்  தளங்கள்

கைத்தொலைபேசி
(Android - Google Play)

கைத்தொலைபேசி
(APPLE - App Store)

DAB வானொலி

Tamil M(urasam) என்ற பெயரில்
திங்கள் – வெள்ளி: 19.00 – 00.00.
ஞாயிறு: 11.00 – 14.00.

முகநூல்

tamilmurasam என்ற பெயரில் நேரலையில்..
செவ்வாய் / வியாழன்: 19.00 – 00.00
ஞாயிறு: 11.00 – 14.00

இணைய வானொலி

tamilmurasam என்ற பெயரில்
24 மணி நேரம்
7 நாட்கள்

மீள் ஒலிபரப்பு

இறுதி மூன்று
நேரடி ஒலிபரப்புகளின் பதிவு

ஞாயிறு

Sunday

      

செவ்வாய்

Tuesday

      

வியாழன்

Thursday

      

மே 18 - சிறப்பு ஒலிபரப்பு

18.05.2018

      

தமிழீழ தேசியத் தலைவரின்
அகவைநாள் சிறப்பு ஒலிபரப்பு

26.11.2018

      

முகநூல் இடுகைகள்

7 மணி நேரத்திற்கு முன்பு

Tamil Murasam radio /தமிழ்முரசம்

மீண்டும் 9 வது குண்டுவெடிப்பு!!
C4 வெடிமருந்து நிரப்பிய சிற்றூர்தி வாகனத்தில் பாரிய குண்டு வெடிப்பு கொட்டகேனையில் இடம்பெற்றுள்ளது இதனால் கொழும்பில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகமான பார்க்ககுறைவான பார்க்க

முகநூலில் பார்க்க

8 மணி நேரத்திற்கு முன்பு

Tamil Murasam radio /தமிழ்முரசம்

அரச பயங்கரவாதத்திற்கு எப்படி பிராத்தனை செய்யமுடியும்!!

2009 ஆம் ஆண்டு இந்த நாட்களும் இனிகடந்துசெல்லும் நாட்களும் சிறீலங்கா அரசபயங்கரவாதத்தால் எமது மக்கள் மிகவும் கொடூரமாக கொன்றொழிக்கப்பட்ட நாட்கள் கண்ணுக்கு முன்னால் எமது தமிழ் இனம் கந்தகத்தால் கருக்கப்பட்டு உயிர்கள் பிரிந்தபோது சர்வதேசத்தின் தெருக்களில் கத்தினோம் கதறினோம் கண்ணீர் விட்டு அழுதோம் ஒருவரும் எம் துயரின் வலியை களைய முன்வரவில்லை மாறாக இந்த ஓரவஞ்ச உலகம் சிறீலங்காவை காப்பாற்றவும் போற்றிப்பாடவுமே கங்கணம் கட்டிநின்றது.

இன்று உல்லாசப்பயணிகளும் கத்தோலிக்க ஆலயங்களும் தங்களின் வியாபாரத்தின் தலைநகரமும் தாக்குதலுக்கு உள்ளான பொழுது ஒப்பாரி வைக்கிறது.
இதே நிலை யாழ்பாணத்திலோ மட்டக்களப்பிலோ மட்டும் நடந்தேறியிருந்தால் கண்டுகொள்ளப்படாத தாக்குதலாக மாறியிருக்கும்.

இந்த இஸ்லாமிய தீவிரவாதிகளின் பிண்ணியில் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு பலத்த அரசியல் பின்னணி இருக்கின்றது என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கை ஏனெனில் இத்தாக்குதலில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிங்களவரையும் இஸ்லாமியரையும் தவிர மிகமோசமாக இழப்புக்களை சந்தித்திருப்பது தமிழ்மக்கள்.

இதை தங்களின் சுய அரசியலுக்காக கத்தோலிக்க இனப்படுகொலை என்பவர்களும் சிறீலங்கா அரசுக்கு எதிரான இஸ்லாமியரின் தாக்குதல் என்பவர்களும்
தங்களின் தேவைக்கேற்ப கருத்துவாதங்களை முன்வைக்கதொடங்கியுள்ளனர்.

எப்படித்தான் இருந்தாலும் மீண்டும் தமிழ்மக்களின் உயிர்களை அதிகம் காவுகொள்ளப்பட்ட தாக்குதலாக இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இத்தெளிவில்லாத இனமாக இன்னும் இருக்கின்றோமா என்ற வேதனை சமூக ஊடகங்களை உற்றுநோக்குகின்றபோது ஏற்படுகின்றது.

நாகரீகத்தின் வெளிப்பாடா? அல்லது தமிழின வரலாற்று புரிதலின் குறைபாடா?
என்ற ஆதங்கமும் அங்கலாய்பும் ஆழ்மனதை சஞ்சலப்படுத்திக்கொண்டிருக்கின்றது.

✍தூயவன்
அதிகமான பார்க்ககுறைவான பார்க்க

முகநூலில் பார்க்க

1 நாளிற்கு முன்பு

Tamil Murasam radio /தமிழ்முரசம்

தமிழர்கள் இலக்கு வைக்கப்படலாம் அவதானம் உறவுகளே!

அவதானம் உறவுகளே.

இன்று கொழும்பில் பல இடங்களில் சந்தேகத்தின் பெயரில் பல தமிழ் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் சந்தேகத்தின் பெயரில் விசேட குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படை (SFT) ஆகியோரினால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் அபாய நிலை தோன்றியுள்ளது.

கொழும்பில் இன்று மூன்று இடங்களில் குண்டு வெடிப்பை தொடர்ந்து விசேட அதிரடிப்படையின் (special task force-STF) தேடுதல் வேட்டை தீவிரமாகி உள்ளது. சந்தேக நபர்கள் எனும் பெயரில் பலர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டும் நிலை காணப்படும்.

ஆகவே இங்கு குறிப்பாக தமிழர்கள் இலக்கு வைக்கப்படலாம். ஆகவே மேல் மாகாணம் கொழும்பு பகுதிக்கு தமது தேவை நிமிர்ந்தம் சென்ற எமது தமிழ் உறவகளை அவதானமாக இருக்கும்படி கூறுங்கள்.

தற்போதும் இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் அமுலில் உள்ளது என்பதை இங்கு குறிப்பிடத்தக்கது. சந்தேகத்தின் பெயரில் கைது செய்தாலும் சந்தேக நபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீதி மன்றில் வழக்கு பதிவு செய்தால் பின்னர் வழக்கு முடியும் வரை நீதி மாவட்ட/ நீதாவான் நீதி மன்றில் பிணை கூட கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் தகவல் உங்கள் உறவினரிடமும் சென்றடைய தவறாது அனைவருக்கும் பகிருங்கள்.
அதிகமான பார்க்ககுறைவான பார்க்க

முகநூலில் பார்க்க

1 நாளிற்கு முன்பு

Tamil Murasam radio /தமிழ்முரசம்

தற்கொலைக் குண்டுதாரிகளே தாக்குதல்!

சிறிலங்காவில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கொழும்பில் ஷங்ரி-லா விடுதியில் நேற்று இரண்டு பேர் 616ஆவது இலக்க அறையில் தங்கியுள்ளனர்.

குறித்த இரண்டு சந்தேக நபர்களுமே இன்று விடுதியின் உணவகப் பகுதி மற்றும் மண்டபத்தில் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளனர் என்பது கண்காணிப்பு காணொளிப் பதிவில் இருந்து தெரிய வந்துள்ளது.

ஷங்ரி- லா விடுதி குண்டுவெடிப்புக்கு 25 கிலோ எடையுள்ள சி-4 வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று விசாரணையாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தற்கொலைக் குண்டுதாரிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தங்கியிருந்த அறையை உடைத்து காவல்துறையினர் சோதனையிட்டு அங்கிருந்து சில பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

எனினும், தற்கொலைக் குண்டுதாரிகள் உள்நாட்டவர்களா வெளிநாட்டவர்களா என்பது உறுதி செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அதிகமான பார்க்ககுறைவான பார்க்க

முகநூலில் பார்க்க

1 நாளிற்கு முன்பு

Tamil Murasam radio /தமிழ்முரசம்

இதுவரை 8 குண்டுகள் வெடித்துள்ளது.

கொழும்பு தெமட்டக்கொட பகுதியில் உள்ள வீடமைப்புத் திட்டத்தில் 8ஆவது தடவையாக குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

நாட்டில் இன்று காலை இடம்பெற்ற தொடர்ச்சியான 7 குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து, 8 ஆவது வெடிப்பு சம்பவமொன்று கொழும்பு தெமட்டக்கொட பகுதியில் பதிவாகியுள்ளது.

இந்த குண்டுவெடிப்புச்சம்பவங்களில்
இதுவரை35 வெளிநாட்டு உல்லாசப்பயணிகள் சாவடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிகமான பார்க்ககுறைவான பார்க்க

முகநூலில் பார்க்க

1 நாளிற்கு முன்பு

Tamil Murasam radio /தமிழ்முரசம்

தமிழ் முரசம் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்..,
இன்றைய நேரடி ஒலிபரப்பு ஜரோப்பிய நேரம் 11.00 – 14.00 மணிவரை உங்களோடு உறவாட இருக்கின்றது.
எமது ஒலிபரப்பில் நேரடியாக இணைந்து சிறப்பிக்க விரும்பினால் தொலைபேசி இலங்கங்கள்
கலையகம்: 0047 228 70 000
வைபர்: 0047 453 82 562
உங்கள் கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் எழுத்துவடிவில் தெரிவிக்கவிரும்பினால் கீழே எழுதுங்கள் ஒலிபரப்பில் இணைக்க ஆவலோடு காத்திருக்கின்றோம்.

<< தமிழ்முரசம் வானொலி – நோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி >>
அதிகமான பார்க்ககுறைவான பார்க்க

முகநூலில் பார்க்க

1 நாளிற்கு முன்பு

Tamil Murasam radio /தமிழ்முரசம்

குண்டுவெடிப்புக்களில் இதுவரை 140 பேர் பலி – 500 பேருக்கு மேல் காயம்!!

இன்று காலை வேளையில் கொழும்பு கொச்சிக்கடை, சங்ரிலா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பெரி , நீர்கொழும்பு கட்டான மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் இதுவரை 140 பேர் உயிர் இழந்துள்ளனர். 475 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்

அதனடிப்படையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் – 42 மரணங்கள், 243 பேர் காயம், கொழும்பு தெற்கு களுபோவில வைத்தியசாலை – 7 மரணங்கள், 24 பேர் காயம், நீர்கொழும்பு வைத்தியசாலை – 64 மரணங்கள், 110 பேர் காயம், மட்டக்களப்பு வைத்தியசாலையில், 27 மரணங்கள், 75க்கும் மேற்பட்டோர் காயம். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 9 வெளிநாட்டவர்கள் அடங்குவதோடு, 13 வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு கொச்சிச்சிக்கடை தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவபிட்டி ​தேவாலயம், சங்கிரில்லா ஹோட்டலின் மூன்றாவது மாடி, மட்டக்களப்பு பிரதேச தேவாலயம் ஒன்றிலும் ,சின்னமன் கிரேன்ட், கிங்ஸ்​பெரி ஹோட்டலிலும் இவ்வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அதிகமான பார்க்ககுறைவான பார்க்க

முகநூலில் பார்க்க

பிரதான செய்திகள்

காணொளிகள்

எம்மவர் நிகழ்வுகள்

Ingenting fra 20. april 2019 til 4. mai 2019.

மாத நாட்காட்டி

april 2019

man tir ons tor fre lør søn
1
2
3
4
5
6
  • கலைப்பாட அறிமுறை
  • புலர்வின் பூபாளம்
7
8
9
10
11
12
13
  • கரப்பந்தாட்டம்
  • அ.பூ.த.க.கூடம் 15 வது ஆண்டுவிழா
14
  • கரப்பந்தாட்டம்
  • சித்திரைப்பிறப்பு
15
16
17
18
19
20
  • சதுரங்கம் மற்றும் கேரம் போட்டிகள்
21
  • சதுரங்கம் மற்றும் கேரம் போட்டிகள்
22
23
24
25
26
27
28
29
30

விளம்பர விபரம்

விளம்பரங்கள் / அறிவித்தல்கள்

ஒரு வாரத்திற்கு :  300kr,-
ஒரு மாதத்திற்கு :1000kr,-
ஆறு மாதங்களுக்கு :2000kr,-
ஒரு வருடத்திற்கு :3000kr,-
மேலதிகமாக நீங்கள் உங்கள் விளம்பரங்களை ஒலி மற்றும் ஒளி வடிவில் விளம்பரப்படுத்த
ஒலிப்பதிவு300kr,-
ஒளிப்பதிவு500kr,-

மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள

Lukk meny
error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது. ©2019 தமிழ்முரசம்.